சச்சின், தோனி தோனியை முந்தி..ரிஷாப் பண்ட் படைத்த பிரம்மாண்ட சாதனை

1 Min Read

Rishabh Pant first indian achieve 100 sixes: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பண்ட் 100வது சிக்ஸரை அடித்து சாதனை படைத்தார்.

ரிஷாப் பண்ட்

 

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.

Rishabh Pant

நான்காம் நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

பண்ட் 69 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் தனது 100வது சிக்ஸரை அடித்தார்.

முதல் இந்தியர்

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற இமாலய சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். 89 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லினை எட்டியுள்ளார்.

Rishabh Pant

அதிக டெஸ்ட் சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள்

ரிஷாப் பண்ட் – 100

விரேந்தர் ஷேவாக் – 91

ரோஹித் ஷர்மா – 88

ரவீந்திர ஜடேஜா – 82

எம்.எஸ்.தோனி – 78

Rishabh Pant

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *