‘டிஜிட்டல் இராணுவம்’ உருவாக்கும் இலக்கை நோக்கிய இந்திய ராணுவத்தின் நவீன தொழில்நுட்ப முன்னெடுப்பு

2 Min Read

இந்திய இராணுவம் தன்னைப் நவீனப்படுத்தி, முழுமையான ‘டிஜிட்டல் ராணுவமாக’ உருவெடுக்கும் பாதையில் தீவிரமாகப் பயணித்து வருகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி மற்றும் ஆளில்லா கட்டமைப்புகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவப் பயன்பாட்டில் ஒருங்கிணைத்து வருகிறது.

இந்திய இராணுவம் 2026-ஆம் ஆண்டை ‘நெட்வொர்க்கிங் மற்றும் தரவு மைய ஆண்டாக’ (Year of Networking and Data Centricity) அறிவித்துள்ளது.செயற்கைக்கோள்கள், உணர்விகள் (Sensors), தரைப்படை வீரர்களின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் என அனைத்தையும் ஒரே வலையமைப்பின் கீழ் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.இதன் மூலம், போர்க்களத்தில் தகவல்களை உடனுக்குடன் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விரைவாகத் தீர்மானங்களை எடுக்க தளபதிகளுக்கு உதவும் சூழல் உருவாக்கப்படுகிறது.

இராணுவத்தின் மூன்று படைகளுக்கும் பயன்படும் வகையில் அதிவேக AI மேகக்கணி கணினி (High-Power Computing AI Cloud) உருவாக்கப்பட்டு வருகிறது.பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘AI உருவாக்கம்/வளர்ச்சி மையத்தை’ இராணுவம் தொடங்கியுள்ளது. மேலும், சென்னை ஐஐடி (IIT Madras) போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை ராணுவம் உருவாக்கி வருகிறது.

2026 ஜனவரியில், இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் ‘இராணுவக் குவாண்டம் கொள்கை கட்டமைப்பை’ (Military Quantum Mission Policy Framework) வெளியிட்டார்.இதன் மூலம் குவாண்டம் தொடர்பு (Quantum Communication), குவாண்டம் கணினி, பாதுகாக்கப்பட்ட ரகசியத் தகவல் பரிமாற்றம் ஆகியவை ராணுவத்தில் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்கால போர்க்களத் தேவைகளுக்காக 5ஜி மற்றும் 6ஜி அடுத்த தலைமுறைத் தொலைத்தொடர்பு ஆய்வுகளில் ஐஐடி-களுடன் இணைந்து இராணுவம் செயல்பட்டு வருகிறது.

ஆளில்லா டுரோன்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் ‘கவுண்டர்-டுரோன்’ கட்டமைப்புகள் இராணுவத்தின் முக்கிய வலிமையாக மாற்றப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் மாற்றத்துடன் சேர்ந்து உள்நாட்டுப் பாதுகாப்புப் பொருட்களின் கொள்முதலும் பெருமளவு அதிகரித்துள்ளது.

2020-21 முதல் டிசம்பர் 2025 வரை கையெழுத்தான ஒப்பந்தங்களில் சுமார் 91% ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.2025-26 நிதியாண்டில் மூலதனக் கொள்முதல் நிதியில் 86% தொகையும் , 2026-27 நிதியாண்டில் 84% தொகையும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதங்களை மட்டும் சார்ந்திருக்காமல், தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்தே இருக்கும் என்பதை உணர்ந்து, இந்தியா தனது முப்படைகளையும் ஒருங்கிணைத்த அதிநவீன டிஜிட்டல் ராணுவமாக மாற்றி வருகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *