மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்காக மூன்று கிண்ணங்களை வென்று கொடுத்துள்ளார். 2022 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற அவர் 2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா கிண்ணத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
ஆர்ஜன்டீனாவுக்காக அவர் மொத்த 207 போட்டிகளில் 185 கோல்களில் பங்காற்றி உள்ளார். இதில் 125 கோல்கள் மற்றும் 60 கோல் உதவிகள் அடங்கும்.
மெஸ்ஸி அடித்த 125 கோல்களில் தனது வலுவான இடது காலால் அவர் 111 கோல்களை பெற்றுள்ளார். 12 கோல்களை வலதுகாலால் பெற்றுள்ளார். இரண்டு கோல்கள் தலையாலும் ஒரு கோல் உடலாலும் பெற்றுள்ளார்.
மெஸ்ஸி இம்முறை பிஃபா உலகக் கிண்ணத்தின்போது உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை பெற்றவராக குறுகிய காலம் சாதனை படைத்தபோதும் அந்த சாதனையை பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே முறியடித்தார். மெஸ்ஸி உலகக் கிண்ண போட்டிகளில் 21 கோல்களைப் பெற்றிருப்பதோடு எம்பாப்பே 22 கோல்களைப் பெற்றுள்ளார்.
வேறு எந்த வீரரை விடவும் அதிக பட்சமாக ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியவராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் (2014, 2022, 2026) ஆடிய ஒரே வீரர் என சாதனை படைத்திருக்கும் மெஸ்ஸி இம்முறை இறுதிப் போட்டியில் ஆடியதன் மூலம் உலகக் கிண்ண இறுதியில் ஆடிய வயதான (39 வயது, 25 நாட்கள்) வீரராகவும் சாதனை படைத்தார்.
ஆர்ஜன்டீன அணிக்காக 11 ஹட்ரிக் கோல்களை மெஸ்ஸி பெற்றிருப்பதோடு அவ்வாறான கடைசி ஹட்ரிக் கோல் 2026 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இடம்பெற்றது.




