நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல் – நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்!
தேசிய நேர்மை வாரம் 2026 இனை முன்னிட்டு முதலாம் நாள் நிகழ்வு 2026.07.27 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு.S.சுதாகர் அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதுடன் அரச சேவையின் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவையை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




