இலங்கை இன்று முதல் போட்டியில் மியன்மார் அணியுடன் பலப்பரீட்சை

1 Min Read

ஆசிய கால்பந்து கூட்டு சம்மேளனத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தகுதிச்சுற்றில் இலங்கை அணி இன்று (31) தனது முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இந்த தகுதிச்சுற்றுத் தொடரில் இலங்கை அணி கே குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அதில் போட்டிகளை நடத்தும் மியன்மாருடன் மாலைதீவு மற்றும் புரூனேய் ஆகிய அணிகளும் போட்டியிடுகின்றன.

போட்டிகள் ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 6ஆம் திகதி வரையில் மியன்மாரின் யங்கொங் நகரில் இடம்பெறவுள்ளதுடன் குழுவில் உள்ள அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளன. இந்நிலையில், கே குழுவுக்கான முதல் போட்டியில் இலங்கை வீரர்கள் இன்று திங்கட்கிழமை போட்டிகளை நடத்தும் மியன்மாருடன் மோதவுள்ளனர்.

இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் மாலைதீவை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதோடு இறுதி குழுநிலைப் போட்டியில் செப்டெம்பர் 6 ஆம் திகதி புரூனேய் உடன் மோதும்

இலங்கைகுழாம்: ஷாதின் ஷாஹீத், வசிம் அஹமட் ஆமிஷ், மொஹமட் ஃபாரிக், ஹாலிக் அஹமட், கே.எஸ்.பி. கஹடகஹவத்த, அஹமட் ஹிஜாஸி, ரஷாத் ஷிஹாப், மொஹமட் ஸைட், திசும் செனுல, மொஹமட் சதீர், ஹுசைன் அப்துல்லாஹ், மொஹமட் யாசிர், ஃபசுல்தீன் அப்துல்லாஹ், மொஹமட் மஸியாட், நாசிம், ஃபாரிஸ் உமர், ஹாதிம் அஹமட், மொஹமட் ரிஷாத், மொஹமட் கதீம், பிரான்சிஸ் பெரேரா, ஹாதிம் அஹமட், அப்துல் மாலிக், ரிகாஸ் மொஹமட்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *