சீ ஸ்டார் டி20 கிண்ணம் சம்மாந்துறை அணி வசம்

0 Min Read

சீ ஸ்டார் டி20 சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் (எஸ்.எஸ்.சி) சம்பியன் கிண்ணத்தை வென்றது.

24 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது பைன் ஸ்டார் அணியை எதிர்கொண்ட எஸ்.எஸ்.சி. அணி நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்ட வெற்றி இலக்கை 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக சம்மாந்துறை விளையாட்டு கழக அணியின் தலைவர் இஸ்மத் தெரிவானார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *