காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் எதிரொலியாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ காட்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.



