எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம்: பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள்

2 Min Read

22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் 22 Kids and Counting நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய குடும்பத்தின் தாயான சூ ராட்ஃபோர்ட் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியுரிமையை மதிக்க வேண்டும்

22 குழந்தைகளின் தாயான சூ ராட்ஃபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் பிரபலமானவர்களாக மாறினர்.

22-kids-and-counting-sue-radford-demands-privacy

Channel 5-யின் 22 Kids and Counting என இந்த குடும்பத்தைப் பற்றிய ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர் சூ ராட்ஃபோர்ட்டின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் சூ ராட்ஃபோர்ட்டின் குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் 51 வயதான சூ ராட்ஃபோர்ட் (Sue Radford) சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என பின்தொடர்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதுகாப்பு சிக்கல்

ரசிகர்கள் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற அவர், தங்கள் வீட்டிற்கு வருவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், உண்மையான பாதுகாப்பு சிக்கலை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “இதைப்பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்கிறேன்; எங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

நாங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறோம். நின்று பேசுவதிலும், புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும், நலம் விசாரிப்பதிலும் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே; அது எங்களுக்கு உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *