நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் பிரதான காரணியாக விளங்கும் தேயிலைத் துறையை மேலும் உயர்த்துவது, “சிலோன் டீ” என்ற உலகளாவிய பிரபலமான வர்த்தக நாமத்தை மேலும் பிரகாசிக்கச் செய்வது, நாட்டின் சிறு தேயிலை தோட்ட உரிமையாளரின் வாழ்க்கைத் தரத்தை உயர்துவது மற்றும் தேயிலைத் தளிர் உற்பத்தியை நவீனமயமாக்குவது ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் 500 தேயிலை கிராமங்கள் திட்டம், நாட்டின் கிராமிய அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
ஏனெனில் இந்த 500 தேயிலை கிராமங்கள் மூலம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளரின் வருமானம், உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், கிராமத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வீதி அபிவிருத்தி, நீர் வசதிகளை பெற்றுக் கொடுத்தல். அத்துடன் தேயிலைத் தளிர் உற்பத்தியிலிருந்து விலகிச் செல்லும் இளம் தலைமுறையை மீண்டும் தேயிலைத் தளிர் உற்பத்தியை நோக்கி ஈர்ப்பது போன்றவையும் இந்த 500 தேயிலை கிராமங்கள் மூலம் செய்யப்பட உள்ளன.
இதன் மூலம் நாட்டின் தேயிலைத் தளிர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு அப்பால், சிறு தேயிலை தோட்ட உரிமையாளரின் வாழ்க்கையை மாற்றி, கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் தேயிலைத் துறையின் எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்படும்.
உலகின் மிகவும் சுவையான தேநீர் கோப்பைக்கு சொந்தக்காரர்கள் பெருமைமிகு இலங்கையர்களே. எனினும் தேயிலை உற்பத்தியில் இன்று சீனா, இந்தியா, கென்யா ஆகிய நாடுகள் நம்மை விட முன்னால் உள்ளன. நாட்டின் தேயிலைத் துறையின் வளர்ச்சிக்கோ உற்பத்தியை அதிகரிக்கவோ முந்தைய அரசாங்கங்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லாததால், உலகின் மிகச் சுவையான தேநீர் கோப்பையின் உரிமையாளர்களான நாம் தேயிலையில் பின்தங்க வேண்டியிருந்தது.
நாட்டின் தேயிலைத் துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓர் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டது. இத்திட்டம், தேயிலைத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்புடன், அதன் பெறுமதிசேர் சங்கிலியோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
அந்த ஐந்தாண்டு மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் தேயிலை பயிரிடப்படும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 500 தேயிலை தோட்ட கிராமங்கள் கிராமங்களை உருவாக்குவதும், அதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதும், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளரை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது மற்றும் ஏற்றுமதி வருமானத்தை பெருமளவில் உயர்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.
அந்த இலக்குக்கு அமைய 2024 ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 262 மில்லியன் கிலோ தேயிலையை 2030 ஆம் ஆண்டளவில் 400 மில்லியன் கிலோவாக உயர்த்துவதும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதும் இந்த முன்மொழியப்பட்ட 500 தேயிலைத் தோட்ட கிராமங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளாகும்.
“சிலோன் டீ வில்லேஜ்” என்று பெயரிடப்பட்ட இந்த 500 தேயிலை கிராமத் திட்டம் நாட்டின் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும், தேயிலைத் துறைக்கும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மிக உயர்ந்த பெறுமதியை வழங்கும்.
உண்மையில் “சிலோன் டீ வில்லேஜ்” முன்மாதிரி தேயிலைக் கிராம திட்டத்தின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலைதளிர் உற்பத்தி மற்றும் வருமான வழிகள் மேம்படுதல், பயிர் நிலத்திலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெறுதல், தேயிலைத் தளிர் உற்பத்தி அடிப்படையாகக் கொண்ட பல்வேறு புதிய வணிகங்களை மேம்படுத்துதல், அதன் மூலமும் தேயிலை விவசாயிகளின் வருமான வழிகளை மேம்படுத்தி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துதல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.
500 சிறு தேயிலைத் தோட்ட சங்கங்களின் அதிகாரப் பிரதேசங்களுக்குள் இதனை செயல்படுத்தவும், தேயிலைக்கான அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் 500 சங்கப் பிரதேசங்களுக்கு வழங்கி முன்மொழியப்பட்ட திட்டத்தை அனைவருடனும் இணைந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 500 தேயிலை கிராமங்கள் மூலம் நாட்டின் தேயிலைத் துறையில் முன்னோடியாகத் திகழ சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் முடியும். இந்த 500 முன்மாதிரி தேயிலைத் தோட்ட கிராமங்களின் முன்மாதிரியைப் பெற்று நாடு முழுவதிலும் உள்ள தேயிலைத் தளிர் உற்பத்தியை உயர் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.
உலகப் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி, இந்தத் தேயிலைத் தோட்ட கிராமங்களுக்கு ‘சிலோன் டீ வில்லேஜ்’ (Ceylon Tea Village) எனப் பெயரிடுவது மிகவும் பொருத்தமானதாக அமையும். இதன் மூலம் உலகளவில் இந்தத் திட்டம் மிக எளிதாகப் பிரபலமடைவதோடு, சர்வதேசக் கவனத்தையும் ஈர்க்கும்.
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் இன்று 75% சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று உலகின் மிகச் சுவையான தேநீர் கோப்பையின் பெருமைமிகு உரிமையைப் பெற்றுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தங்கள் வியர்வை, இரத்தம், கண்ணீரை சிந்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு தோள் கொடுக்கும் அளவு மிகவும் பாராட்டத்தக்கது. அதனால்தான் இன்னும் மூன்று வருடங்களில் இந்த 500 தேயிலை கிராமங்கள் மூலம் நாட்டின் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக வலுவடைந்து, நாட்டின் தேயிலைத் துறையின் மற்றும் உயர்ந்த ஏற்றுமதி வருமானத்தின் பெருமைமிகு வாரிசுகளாகவும், உலகின் மிகவும் பிரபலமான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாகவும் மாறுவது உறுதி.
இந்தத் தேயிலை கிராமத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆறு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். உலக சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள உயர்தரத் தேயிலையை உற்பத்தி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய, சிறந்த மற்றும் மீளுருவாக்க விவசாய நடைமுறைகளைக் கொண்ட 500 ‘சிலோன் டீ’ கிராமங்கள் உருவாக்கப்படும். அத்துடன், அக்கிராமங்களில் இருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்துகளைக் கொண்டு, தரமான உற்பத்தித் தரநிலைகளைப் பேணிச் செயலாற்றும் 50 நவீன தேயிலைத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
அத்துடன் இரண்டாவது நோக்கம் சுற்றுச்சூழல் தரத்தை பாதுகாக்கும் 500 தேயிலை கிராமங்களை இதன் மூலம் உருவாக்குவதாகும்.
மேலும் கிராமத்திற்குள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு தேயிலைத் தளிர் உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை உயர்த்துவதும், தேயிலைதளிர் உற்பத்தியுடன் செய்யக்கூடிய கூடுதல் வருமான வழிகள் அல்லது வணிகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதும் இந்த 500 “சிலோன் டீ” கிராமங்களை உருவாக்குவதன் மற்றொரு நோக்கமாகும்.
அடுத்த நோக்கமாக “சிலோன் டீ வில்லேஜ்” 500 கிராம திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கிராம சமூகங்களின் திறனை வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது நோக்கமாக சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பின் மூலம் பாதுகாப்பான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த 500 தேயிலைக் கிராமங்களின் இறுதி நோக்கமாக 500 கிராமங்களுக்குள் சமூகத்தை உயிர்ப்பிக்கும் செயல்முறைகள் மூலம் வலுப்படுத்துவது அமைகின்றது. அதன் மூலம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் குடும்பங்களுக்கு உயர் நிதிப் பங்களிப்பை வழங்குவதுடன், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை விவசாய தொழில்முனைவோராக வலுப்படுத்துவதும் இதன் மூலம் செய்யப்பட எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் தளிர் உற்பத்தியை அதிகரிப்பது, தளிர்களின் தரத்தை அதிகரிப்பது, இரசாயன உரப் பயன்பாட்டை 10% குறைப்பது, தரமான தளிர்களுக்கு அதிக விலை வழங்குவது, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது ஆகியவை செய்யப்படும்.
கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட செயலற்ற கொள்கைகளால், நாட்டிற்கு அதிகபட்ச ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தந்த தேயிலைத் துறை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது.
எனினும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்னவும் தேசிய தோட்டக் கொள்கையின் மூலம் இத்துறையை மீட்டெடுக்கத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் முதன்மைத் தோட்டப் பயிர் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி வருமானத்தை 6.5 பில்லியன் டொலர்களாக உயர்த்த தேவையான பலமான அடித்தளம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த இலக்குகளை நோக்கிய அரசாங்கத்தின் நகர்வுகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அவை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, மக்களுக்குச் செழிப்பான தேசத்தையும் அழகான வாழ்வையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.




