தோல்விக்கு இலங்கையை பழிதீர்த்த இங்கிலாந்து அணி: சம்பவம் செய்த ஜோ ரூட்

1 Min Read

கொழும்பில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இரண்டாவது ஒருநாள் போட்டி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது.

Pathum NissankaGetty Images

முதலில் ஆடிய இலங்கை அணி 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அசலங்கா 45 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Charith AsalankaGetty Images

ஜோ ரூட்

ஜோ ரூட் 75 ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 42 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 33 ஓட்டங்களும் எடுத்தனர். தனஞ்செய டி சில்வா, வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sri Lanka vs England, odi 2026

2 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 75 ஓட்டங்களும் விளாசிய ஜோ ரூட் (Joe Root) ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் அசலங்கா, “நாங்கள் குறைந்தபட்சம் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தோம். குசாலின் ரன்-அவுட், நான் ஆட்டமிழந்தது மற்றும் தனஞ்செயாவின் ஆட்டமிழப்பு; நாங்கள் மேம்படுத்த வேண்டிய சில பகுதிகள் இவை.

நாங்கள் சில ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தோம். ரூட் மற்றும் ப்ரூக்கிற்கு பாராட்டுக்கள். அவர்கள் மத்திய ஓவர்களில் மிகச் சிறப்பாக துடுப்பாட்டம் செய்தனர். நாங்கள் நிறைய முயற்சி செய்தோம், பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். பாராட்டுக்கள் அவர்களுக்குத்தான் சேர வேண்டும். மீண்டும் அடிப்படை விடயங்களை நாங்கள் சரியாக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Joe RootGetty Images

Joe RootGetty Images

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *