500 மில்லியன்! டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறை

1 Min Read

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு தொடரை இந்தியாவில் மட்டும் பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியன் கடந்துள்ளது.

இந்தியாவில் புதிய சாதனை

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது.

West Indies vs England, T20 World Cup 2026

இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தொடரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் இந்தியாவில் இது அதிகம் ஆகும்.

நடப்பு தொடரில் இதுவரை 50 போட்டிகள் முடிந்துள்ளன. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இந்த 50 போட்டிகளையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை கடந்துள்ளது.

50 கோடி

அதாவது 50 கோடி பார்வையாளர்கள் நடப்பு டி20 தொடரை ரசித்துள்ளனர். நேரலை ஒளிபரப்பில் டிஜிட்டல் தளம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஒரு போட்டியை ஒரே நேரத்தில் 6.05 கோடி பேர் நேரலையில் பார்த்தது உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது.

West Indies vs England, T20 World Cup 2026

அத்துடன் ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வீடியோக்களின் எண்ணிக்கை 10 பில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறுகையில், “டி20 உலகக்கிண்ண 2026 தொடரை உலகளவில் அனைவரும் அணுகக்கூடிய ஒரு நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற எங்களது இலக்கு நிறைவேறியுள்ளது. இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

Jay Shah

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *