95 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி! பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் மிரட்டி பேட்டிங்கில்..மோசமாக சொதப்பிய இலங்கை

1 Min Read

டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

பிலிப் சால்ட் அரைசதம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்றுப் போட்டி பல்லேகேலவில் நடந்தது.

Philip Salt

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Sri Lanka vs England, T20 World Cup 2026

அரைசதம் விளாசிய பிலிப் சால்ட் (Philip Salt) 62 (40) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் வில் ஜேக்ஸ் 14 பந்துகளில் 21 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.

Dunith Wellalage

துனித் வெல்லாலகே (Dunith Wellalage) 3 விக்கெட்டுகளும், மதுஷங்கா மற்றும் தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Will Jacks

அதிர்ச்சி தோல்வி

பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் நிசங்கா 9 ஓட்டங்களிலும், மிஷாரா 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

Sri Lanka vs England, T20 World Cup 2026

அடுத்து வந்த வீரர்களை வில் ஜேக்ஸ் வெளியேற்ற, அணித்தலைவர் தசுன் ஷானகா (Dasun Shanaka) அணியை காப்பாற்ற போராடினார். இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 24 பந்துகளில் 30 ஓட்டங்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீரா (6), மதுஷங்கா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.

Kamindu Mendis

இதன்மூலம் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வில் ஜேக்ஸ் (Will Jacks) 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், டாவ்சன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Dasun Shanaka

will Jacks, England Cricket Team

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *