உலகக்கிண்ணத்தில் முதல் சர்வதேச சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! வாழ்வை சாவா போட்டியில் அபாரம்

1 Min Read

நமீபியா அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் சாஹிப்ஸதா ஃபர்ஹான் முதல் சதத்தை பதிவு செய்தார்.

வாழ்வா? சாவா? போட்டி

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், நமீபியா அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் ஆடி வருகிறது.

Saim Ayub

கொழும்பில் நடந்து வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது.

சைம் அயூப் 14 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் சல்மான் ஆகா 23 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Salman Agha

சாஹிப்ஸதா ஃபர்ஹான்

பின்னர் வந்த நஃபே 5 ஓட்டங்களில் அவுட் ஆக, தொடக்க வீரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 57வது பந்தில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.

Sahibzada Farhan

இறுதிவரை களத்தில் நின்ற ஃபர்ஹான் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.

Sahibzada Farhan

ஷதாப் கான் 20 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாச, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.

Sahibzada Farhan

நமீபியா தரப்பில் ஜேக் ப்ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளும், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Sahibzada Farhan

Pakistan vs Namibia, T20 World Cup 2026

Shadab Khan

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *