2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு

2 Min Read

ஜிம்பாப்வேவின் வெற்றி புள்ளிவிவரங்களை வைத்து, 2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

2026 T20 உலக கிண்ணம்

2026 T20 உலக கிண்ண தொடர் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு | India Win Icc Trophy If Zimbabwe Beat Australia

கடந்த 2024 T20 உலக கிண்ணத்தை இந்தியா வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது.

இதுவரை T20 உலக கிண்ண வரலாற்றில் ஒரு அணி தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. மேலும், தொடரை நடத்தும் நாடும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.

ஆனால், இந்த முறை இந்திய அணி இந்த நம்பிக்கைகளை உடைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ரசிகர்கள் நம்புவது ஜிம்பாப்வேவின் வெற்றியை தான்.

ஜிம்பாப்வே தொடர்பு

ஜிம்பாப்வே உலக கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய போதெல்லாம், இந்தியா உலகக்கிண்ணத்தை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு.

1980 ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே, 3 ஆண்டுகளில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்தில் கலந்து கொண்டது. இதில், அவுஸ்திரேலியாவை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு | India Win Icc Trophy If Zimbabwe Beat Australia

இந்த உலக கிண்ண தொடரில், நடப்பு சாம்பியனாக இருந்த பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி முதல்முறையாக இந்திய அணி உலகக்கிண்ணத்தை வென்றது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு | India Win Icc Trophy If Zimbabwe Beat Australia

இதனையடுத்து, கடந்த 2007 T20 உலக கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. அந்த 2007 T20 உலக கிண்ணத்திலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு | India Win Icc Trophy If Zimbabwe Beat Australia

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியிலும், அவுஸ்திரேலியாவை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

2026 T20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? பின்னணியில் உள்ள ஜிம்பாப்வே தொடர்பு | India Win Icc Trophy If Zimbabwe Beat Australia

இதனால், 2026 T20 உலக கிண்ணத்திலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

கடந்த 2024 T20 உலகக்கிண்ண தொடரில், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா, 2026 T20 உலகக்கிண்ண தொடரிலும் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசுரபலத்தில் உள்ளது.

நாளை கொழும்புவில் நடைபெற உள்ள போட்டியில், இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *