டி20 உலகக்கிண்ணம்: இத்தாலிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஸ்கொட்லாந்து அணி

1 Min Read

2026 டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இத்தாலிக்கு அணிக்கு 208 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ஸ்கொட்லாந்து நிர்ணயித்துள்ளது.

ஜார்ஜ் முன்சி விளாசல்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.

Scotland vs Italy, T20 World Cup 2026

நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, ஸ்கொட்லாந்து முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.

மைக்கேல் ஜோன்ஸ் மற்றும் ஜார்ஜ் முன்சி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 83 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவித்தது.

George Munsey, Scotland vs Italy

அரைசதம் விளாசிய ஜார்ஜ் முன்சி (George Munsey) 54 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

207 ஓட்டங்கள்

பின்னர் 37 ஓட்டங்களில் மைக்கேல் ஜோன்ஸ் (Michael Jones) ஆட்டமிழக்க, பிரண்டன் மெக்முல்லன் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதற்கிடையில் அணித்தலைவர் பெர்ரிங்டன் (15), புரூஸ் (1) வெளியேற, மைக்கேல் லீஸ்க் அதிரடியில் மிரட்டினார்.

Michael Jones, Scotland vs Italy

பிரண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில் 41 ஓட்டங்களும் (4 சிக்ஸர்), லீஸ்க் 5 பந்துகளில் 22 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச ஸ்கொட்லாந்து அணி 207 ஓட்டங்கள் குவித்தது.

இத்தாலியின் தரப்பில் ஜேஜே ஸ்மட்ஸ், அலி ஹசன், ஸ்டீவர்ட் மற்றும் டிராகா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Scotland vs Italy, T20 World Cup 2026

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *