கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 192 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 48 (32) ஓட்டங்களும், டெவல்ட் பிரேவிஸ் 41 (29) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 35 (23) ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 31 (22) ஓட்டங்களும், அஜிங்க்யா ரஹானே 28 (22) ஓட்டங்களும் எடுத்தனர். நூர் அகமது 3 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் அகேல் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ரஹானே கூறிய காரணம்
தோல்வி குறித்து பேசிய ரஹானே, “பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் பிட்சில் 190 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது உண்மையில் ஒரு சிறந்த விடயம்; குறிப்பாக எதிரணி பவர்பிளேயில் 70க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருந்த நிலையில் இது மிக முக்கியமானது.
தற்போதைய சூழல் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஆம், நாங்கள் போட்டிகளில் வெற்றி பெறவில்லை; இது ஒரு கடினமான காலகட்டம்தான்.
ஒரு குழுவாக நாங்கள் அனைவரும் நேர்மறையாக சிந்திப்பதும், நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பதும், நிகழ்காலத்தின் மீது மட்டுமே முழு கவனத்தை செலுத்துவதும் மிக முக்கியம்” என்றார்.





