பொதுவாக மக்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மத்திய அரசின் பாதுகாப்பான நீண்டகால சேமிப்பு திட்டமாகும்.
ஓய்வுக்குப் பிறகு மாதம் சுமார் ரூ. 61,000 வருமானம் பெற உதவும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
முதிர்வு முடிந்த பிறகு, 5 ஆண்டுகள் அடிப்படையில் கணக்கை பலமுறை நீட்டிக்க முடியும். தற்போது PPF வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது.
ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் (மாதம் ரூ.12,500) 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், சுமார் ரூ.1.03 கோடி நிதி உருவாகும்.

இந்த தொகையை எடுக்காமல் வைத்திருந்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.7.31 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு சுமார் ரூ.60,941 வருமானம் பெறலாம்.
இந்த திட்டத்தில் அசல் தொகை அப்படியே இருக்கும், மேலும், வட்டியை மட்டும் ஓய்வூதியமாக பயன்படுத்தலாம்.
மேலும், PPF வட்டிக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பதால், இது ஒரு மிகச்சிறந்த ஓய்வூதியத் திட்டமாக கருதப்படுகிறது.




