பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதற்கு பின்னர் நிலப்பகுதிகள் சற்று மேலெழுந்து, கண்டங்கள் உருவாகினதாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில், பூமியில் முதன்முதலில் நீருக்கடியில் இருந்து மேல் தோன்றிய நிலப்பகுதி எது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி, அந்த முதல் நிலப்பகுதி இந்தியாவில் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாறைகள் ஆய்வு செய்யப்பட்டன.
முன்னதாக, கடல் நீருக்கு அடியில் இருந்து நிலப்பகுதிகள் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்பட்டது.
ஆனால் இந்த புதிய ஆய்வு, 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கண்டங்கள் உருவாகியிருக்கலாம் என தெரிகிறது.

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூம் பகுதியே உலகிலேயே முதலில் நீரிலிருந்து மேலெழுந்த நிலப்பகுதி என ஆய்வு கூறுகிறது.
அங்கு உள்ள சிங்பூம் பாறைகள் உலகில் முதன்முதலாக உருவான கடல் மணல் மற்றும் ஆற்றுப்படுக்கை மணல்களுடன் உருவாகியுள்ளன.
சிர்கான் என்ற கனிமத்தின் அடிப்படையில், இந்த பாறைகள் சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது.




