மனைவிக்கு நன்றி கூறி ஓய்வை அறிவித்த வான் டெர் டஸன்: நீ இல்லாமல் பயணித்திருக்க முடியாது என உருக்கம்

2 Min Read

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் வான் டெர் டுசென் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ரஸ்சி வான் டெர் டஸன்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்தவர் ரஸ்சி வான் டெர் டஸன் (Rassie Van Der Dussen). 37 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Rassie Van der Dussen

தென் ஆப்பிரிக்க அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டஸன் தனது முடிவை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களில், தனது பயணத்தை நினைவுகூர்ந்து தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவம்

அவரது பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதை, பெருமிதம் நிறைந்த இதயத்துடனும், ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் அறிவிக்கிறேன்.

Rassie Van der Dussen

புரோட்டியாஸ் அணியின் சீருடையை அணிந்து விளையாடுவது என்பது மிகுந்த மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வேண்டி நிற்கும் ஒரு சாதனையாகும்; இது உங்களை சோதிப்பதோடு மட்டுமல்லாமல், மிக அற்புதமான வகையிலும் உங்களுக்கு பலன் அளிக்கிறது.

என் நாட்டிற்காக விளையாடியதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது. இந்தப் பயணம் பல ஆண்டுகாலத் தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது; ஆயினும், தென் ஆப்பிரிக்க நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த சிறப்புரிமைக்காக, நான் செலவிட்ட ஒவ்வொரு கணமும் முழுமையாக தகுதியானது” என கூறியுள்ளார்.

Rassie Van der Dussen

அத்துடன் தனது மனைவியைக் குறிப்பிட்டு, “என் மனைவி லாராவுக்கு சொல்கிறேன்; இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நீ என் பக்கத்திலேயே துணையாக நின்றாய்.

வாழ்க்கையின் மிக உயர்ந்த வெற்றிகளையும், மிகக் கடினமான வீழ்ச்சிகளையும் நீ மிகுந்த பரிவுடனும், கண்ணியத்துடனும், மன உறுதியுடனும் எதிர்கொண்டாய்.

நீயே எனக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாகத் திகழ்ந்தாய்; நீ இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் பயணித்திருக்கவே முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Rassie Van der Dussen

29வது வயதில் ஆரம்பித்த பயணம்

2018ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, வான் டெர் டஸன் தனது 29வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

71 ஒருநாள் போட்டிகளில் 2,657 ஓட்டங்களும், 57 டி20 போட்டிகளில் 1,406 ஓட்டங்களும், 18 டெஸ்ட் போட்டிகளில் 905 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

வான் டெர் டஸன் ஒருநாள் கிரிக்கெட்டில் பல போட்டிகளில், மிடில் ஆர்டரில் நின்று ஆடி அணி வெற்றிகளை பெற காரணமாக அமைந்திருக்கிறார்.

2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத்திலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rassie Van der Dussen

Rassie Van der Dussen

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *