கான்வே அதிரடி..68 ரன் வித்தியாசத்தில் வெற்றி: தென் ஆப்பிரிக்க அணிக்கு நியூஸிலாந்து தரமான பதிலடி

1 Min Read

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெவோன் கான்வே அரைசதம்

ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

Tim Robinson/Tom Latham

டாம் லாதம் 11 ஓட்டங்களிலும், டிம் ராபின்ஸன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, நிக் கெல்லி அதிரடியாக 12 பந்துகளில் 21 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.

அடுத்து சான்ட்னர் 20 ஓட்டங்கள் விளாச, தொடக்க வீரர் டெவோன் கான்வே (Devon Conway) அரைசதம் விளாசினார்.

அணியின் ஸ்கோர் 124 ஆக உயர்ந்தபோது, கான்வே 60 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஜோஷ் கிளார்க்ஸன் 9 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது.

Devon Conway

நியூஸிலாந்து வெற்றி

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 15.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், நியூஸிலாந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Devon Conway

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே (George Linde) 12 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

லோக்கி பெர்குசன், பென் சியர்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி மார்ச் 20ஆம் திகதி ஈடன் பார்க்கில் நடைபெற உள்ளது.

New Zealand vs South Africa, 2nd T20 2026

George Linde

New Zealand vs South Africa, T20 2026

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *