இந்திய இளையோர்களும் வலுவான ஆட்டம்: போட்டி சமநிலைக்கு வாய்ப்பு

1 Min Read

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இந்திய அணியும் வலுவான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் இந்தப் போட்டி சமநிலையில் முடிவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

காலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இலங்கை இளையோர் அணி முதல் இன்னிங்ஸில் 424 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (15) முதல் இன்னிஸை தொடர்ந்த இந்திய இளையோர் அணி ஆட்ட நேர முடிவில் 117 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆரம்ப வீரர்களான லக்ஷியா ரைசன்தனி (ஆட்டமிழக்காது 196) மற்றும் சகர் விர்க் (134) ஆகியோர் 337 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இரட்டைச் சதத்தை நெருங்கி இருக்கும் ரைசன்தனி 306 பந்துகளில் 21 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடனேயே 196 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை இளையோர் அணி சார்பில் துல்னித் சிகேரா, லதென்திர ஆகாஷ் மற்றும் திமத் அபேசிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியில் இன்றைய (16) ஒரு நாளே எஞ்சியுள்ள நிலையில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *