இலங்கையின் முன்னணி 10 கால்பந்து அணிகள் பங்கேற்கும் சுப்பர் லீக் கால்பந்து தொடர் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரட்டை ரவுன்ட் ரொபின் சுற்று அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஓர் அணி மற்ற அணியுடன் தலா இரு முறை மோதவிருப்பதோடு எதிர்வரும் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, சுகததாச அரங்கில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்பதில் சில அணிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில், அந்த அணிகள் இதில் பங்கேற்காத பட்சத்தில் அவை தரமிறக்கப்படும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் எச்சரித்துள்ளது. இந்தத் தொடரின் முதல் இரு வாரங்களுக்கான போட்டி விபரத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன் அனைத்துப் போட்டிகளும் மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும்.
ஜூலை 4 – புளூஸ்டார் எதிர் அப்கன்ட்ரி ஈகிள்
ஜூலை 5 – நியூ ஸ்டார் எதிர் புளூ ஈகிள்
ஜூலை 12 – ரினோன் எதிர் ரட்ணம்
ஜூலை 13 – கொழும்பு க.க. எதிர் டிபென்டர்ஸ்
ஜூலை 15 – ரெட் ஸ்டார் எதிர் சீ ஹொக்ஸ்




