ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் – பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்?

2 Min Read

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கப்பட்ட தாக்குதல், தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி மற்றும் 1000க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போர் மத்திய கிழக்கு மட்டுமல்லாது, எண்ணெய், பெட்ரோல், விமான சேவை பாதிப்பு என உலகம் முழுவதும் பாரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

டிரம்பிற்கு பின்னடைவு

4 நாட்களில் இந்த போரை முடித்து விடலாம் என நினைத்து தாக்குதலை தொடங்கிய டிரம்ப், ஈரான் தற்போது வரை போரை தாக்குப்பிடித்து போரை நீட்டிட்டு வருவது டிரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்? | Trump To Use Plan B C In Iran War Next 3 Days

ஈராக், சிரியாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கை ஈரானிலும் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த ஈரானின் தலைமை, அமெரிக்காவை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்து வைத்திருந்தது. அதுவே காமெனி கொல்லப்பட்ட பிறகும், ஈரான் தொடர்ந்து போரிட்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் இனி ஒரு அமெரிக்கா வீரரும் உயிரிழக்க மாட்டார் என தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேசி வந்த நிலையில், இந்த போரில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதும், மத்திய கிழக்கில் அமெரிக்கர்கள் வசிக்கும் இடங்களையும் ஈரான் தாக்கி வருவது டிரம்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம் மூலம் தனக்கு சாதகமான ஆட்சியை அமைக்க முயலும் டிரம்ப், ஈரானின் பொருளாதார வளங்களை தாக்கமாட்டார், இஸ்ரேலையும் தாக்க அனுமதிக்கமாட்டார்.

மேலும், ஈரான் மீதான தாக்குதல் தொடங்கி காமேனி கொல்லப்பட்ட உடன், மக்கள் ஈரான் அரசுக்கு எதிராக கிளர்த்தெழுந்து ஆட்சி மாற்றம் நடைபெறும் என டிரம்ப் நினைத்திருந்தார். ஆனால், மக்கள் ஈரான் அரசுக்கு ஆதரவாக வீதியில் திரண்டதும் டிரம்ப்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்? | Trump To Use Plan B C In Iran War Next 3 Days

மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா பொறுப்பு என்ற உத்திரவாதத்துடன் அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தி அதன் பொருளாதாரத்திற்கு பாரிய அடியை கொடுத்துள்ளது ஈரான்.

இந்த போர் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ந்தால், உலக பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும் நிலையில், உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருகின்றன.

டிரம்ப்பின் Plan B, C

இதனால், 3 நாட்களுக்கு ஈரானின் ராணுவ நிலைகள், ஏவுகணை மையங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி விட்டு, அணு சக்தி நிலையங்களை அழித்து விட்டோம் வெற்றி எனக்கூறி போரில் இருந்து பின்வாங்கும் Plan B திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், 3 நாட்களுக்கு பிறகும் ஈரான் தாக்குப்பிடித்து போரை நீடித்து வந்தால், Plan C ஆக சீனா அல்லது ரஷ்யா மூலம் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எதிர்வரும் 3 நாட்கள் இருதரப்பில் இருந்தும் தீவிர தாக்குதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள இந்த போரில், பாரிய இழப்பை சந்தித்து, அதேயளவு இழப்பை எதிர்தரப்பிற்கு கொடுக்க முடியாமல் விட்டாலும், ஈரான் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் தாக்குப்பிடித்தாலே அது ஈரானுக்கு வெற்றி என ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *