வடமேற்கு பாகிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்

1 Min Read

வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் இராணுவ வீரர்கள், பொலிஸார் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள், 02 பொலிஸ் அதிகாரிகள் ஒரு வனத்துறை அதிகாரி ஆகியோருடன், தாக்குதல்தாரிகள் 12 பேரும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதலை நான்கு தற்கொலை தாரிகள் மேற்கொண்டதாக பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாங்க் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிக்குள் தற்கொலை தாரிகள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதோடு வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை சுற்றுச்சுவரில் மோதி வெடிக்கச் செய்துள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து ஏனைய தீவிரவாதிகளைத் தேடி பிரதேசத்தில் விரிவான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அல் ஜசீரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *