தீப்பிடித்து மூழ்கிய ரஷ்ய LNG கப்பல்- 30 பணியாளர்கள் உயிருடன் மீட்பு

1 Min Read

லிபியா கடற்கரையில் ரஷ்ய LNG கப்பல் தீப்பிடித்து மூழ்கியது.

லிபியா கடற்கரை அருகே ரஷ்யாவின் Arctic Metagaz என்ற எரிவாயு (Liquified Natural Gas) கப்பல், திடீரென வெடித்து தீப்பிடித்ததில், முழுமையாக மூழ்கியது.

இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு சிர்டே துறைமுகத்திற்கு வடக்கே 130 கடல் மைல்கள் (240 கிலோமீற்றர்) தொலைவில் நடந்ததாக லிபிய துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலில் இருந்த 30 பணியாளர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Russian LNG tanker fire Libya, Arctic Metagaz explosion, Shadow fleet Russia sanctions, Libya Malta maritime rescue, Ukraine naval drone attack claim, Murmansk LNG shipment incident #Russia #Libya #LNGTanker #MaritimeAccident #UkraineWar #EnergyCrisis #BreakingNews #MediterraneanSea #GlobalTrade

கப்பல் பல அவசர அழைப்புகளை அனுப்பியதைத் தொடர்ந்து, மால்டா ஆயுதப்படைகள் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து உதவி செய்துள்ளன.

இந்த கப்பல் மேற்கத்திய தடைகளை தவிர்க்க ரஷ்யாவின் Shadow Fleet கப்பல்களில் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த கப்பல் ரஷ்யாவின் Murmansk துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம், இந்த தாக்குதலை உக்ரைன் கடற்படை ட்ரோன்கள் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் இராணுவம் இதுவரை எந்த கருத்து வெளியிடவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *