வடமேற்கு அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மையத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு ஒரு சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சியாட்டில் நேற்று முன்தினம் ஆரம்பமான மூன்று நாள் வருடாந்த உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றி இருந்த வேளையில் உள்ளூர் நேரப்படி 18:01 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட சியாட்டில் பொலிஸ் துறை உதவித் தலைவர் டைரோன் டேவிஸ், இச்சம்பவத்துடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சம்பவ இடத்தில் தடுத்து வைக்கப்பட்டதோடு இரண்டாவது நபர் தப்பியோடியுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றுள்ளார். இந்த ஆண்டில் இற்றை வரையும் அமெரிக்காவில் குறைந்தது 271 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சி.என்.என்.




