இலங்கையில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள 31/2026 இலக்க சுற்றுநிருபத்தின்படி, 2027 ஆம் ஆண்டில் மொத்தம் 197 நாட்கள் பாடசாலைகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகள்:
முதலாம் தவணை: 2027 ஜனவரி 04 முதல் ஏப்ரல் 09 வரை (விடுமுறை: ஏப்ரல் 10 – ஏப்ரல் 25).
இரண்டாம் தவணை: 2027 ஏப்ரல் 26 முதல் ஜூலை 30 வரை (விடுமுறை: ஜூலை 31 – ஓகஸ்ட் 29).
மூன்றாம் தவணை: 2027 ஓகஸ்ட் 30 முதல் டிசம்பர் 03 வரை.
முஸ்லிம் பாடசாலைகள்:
முதலாம் தவணை:
கட்டம் 1: ஜனவரி 04 – பெப்ரவரி 05
கட்டம் 2: மார்ச் 15 – ஏப்ரல் 09
கட்டம் 3: ஏப்ரல் 15 – ஏப்ரல் 30
இரண்டாம் தவணை:
கட்டம் 1: மே 03 – மே 14
கட்டம் 2: மே 21 – ஓகஸ்ட் 27
மூன்றாம் தவணை:
ஓகஸ்ட் 30 – டிசம்பர் 03
முக்கிய பரீட்சை விபரங்கள்:
A/L பரீட்சை: 2027 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.
O/L பரீட்சை: 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தரம் 12 வகுப்புகள்: 2027 ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட காரணங்களால் பாடசாலை நாட்கள் தவறினால், அதற்குப் பதிலாக மாற்று பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




