மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் விசேட தேவையுடைய மேலும் ஒரு பிள்ளையின் குடும்பத்திற்கு, தமிழ் மக்கள் இளைஞர் அணியினால் அத்தியாவசிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பட்டிப்பளை கிராமத்தில் வசிக்கும் திருமதி பரமேஸ் அவர்களின் குடும்பத்திற்கே இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு குடிநீர் வசதிகள் மற்றும் மின்சார இணைப்பு ஆகியன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
விசேட தேவையுடைய பிள்ளைகளையும், அவர்களின் குடும்பங்களையும் கருத்திற்கொண்டு இவ்வாறான உதவித் திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் மக்கள் இளைஞர் அணி, சமூகத்தின் பல்வேறு தேவைகளையும் அடையாளம் கண்டு, பரந்துபட்ட வகையில் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




