நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி சி.லாவண்யா படுவான்கரை மண்ணில் வரலாற்றுச் சாதனை:

Admin
By
Admin
1 Min Read

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு படுவான்கரை பிராந்திய வரலாற்றுப் பதிவாக, நாவற்காடு நாமகள் கலையரங்கில் முதன்முறையாக பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வொன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்று (14/10/2026) நடைபெற்ற இந்நிகழ்வு, மட்/நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு. இரா. தியாகரத்தினம் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
பாடசாலையின் நடன ஆசிரியை திருமதி தாரகி மயூரன் அவர்களின் சிறந்த நெறிப்படுத்தல் மற்றும் பயிற்சியில், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் மாணவியான செல்வி சி. லாவண்யா தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை மிக நேர்த்தியாகச் செய்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.
மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிமனையின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, செல்வி சி. லாவண்யாவின் நாட்டியச் சேவையை வாழ்த்திப் பாராட்டினர். படுவான்கரை மண்ணில் பாடசாலை மாணவி ஒருவர் இத்தகைய கலைச் சாதனையைப் படைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *