சீன உதவியின் கீழ் கொட்டாவ பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கான மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவத்தை கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் தொடர்பாடல் பிரிவுக்கு நேரில் கொண்டு வந்து ஒப்படைக்கலாம் அல்லது பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கலாம்.
கடித உறையின் மேல் இடது மூலையில் “சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம்” எனக் குறிப்பிடவும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 ஓகஸ்ட் 25 ஆகும்
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
கலாசார பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8 ஆம் மாடி, செத்சிறிபாய,
பத்தரமுல்ல.




