தாழமுக்கம்; வங்களா விரிகுடாவில் புயல் உருவாகும் சாத்தியம் – நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

Admin
By
Admin
2 Min Read

வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேல் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று (24) ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய அதிக சாத்தியம் காணப்படுவுதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இத்தொகுதி மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (25) அளவில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும், நாளை மறுதினம் (26) காலையளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகுதியால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் எதுவும் ஏற்படாது என்றாலும், இத்தொகுதியுடன் தொடர்பான காற்று நாட்டுக்குக் குறுக்காக காணப்படுவதால், எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, குறிப்பாக இப்பிரதேசங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *