ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் இருக்க ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என ஆர்.யூ.வி தொலைக்காட்சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதை ஐஸ்லாந்து மக்களில் பெரும்பான்மையினர் நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 225,031 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 52.8 சதவீதமானோர் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்ததாகவும், 47.2 சதவீதமானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அந்த பொது ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 12,600 வாக்குகள் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை நிராகரித்த அந்த மக்கள், ஐஸ்லாந்தின் மீன்பிடி நீர்நிலைகள் ஆபத்தில் ஆழ்த்த முடியாத அளவுக்கு முக்கியமானவை என்று கூறியவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிரின் மிதவாத-இடதுசாரி அரசாங்கம் 2027 இற்குள் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துவதாக உறுதியளித்திருந்தது, ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிறீன்லாந்துக்கு விடுத்த அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சர்வதேச பதற்றங்கள் காரணமாக அத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது.
சி.என்.என்., பி.பி.சி




