பாரிய சிறுநீரக கல்லை அகற்றிய திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

1 Min Read

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் சிறுநீர் பையிலிருந்து மிகப்பாரிய சிறுநீரக கல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (14) குறித்த சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த சிறுநீர்ப்பை (Vesicolithotomy) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில், வைத்தியர்களான எம்.எம். ரிஷ்லி, ஜே.எம். இஹ்ஸான், சீ. பிரகலாதன், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமில ஜயகொடி ஆகிய குழுவினரே இந்த அறுவை சிகிச்சையை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *