நடுவீதியில் வாள் வீசி பஸ்ஸை தடுத்து மிரட்டல்; பெண் உள்ளிட்ட மூவர் கைது!

1 Min Read

திவுலபிட்டிய பகுதியில் பிரதான வீதியை மறித்து, கார் ஒன்றில் வந்தவர்கள் பஸ் ஒன்றைத் தடுத்து நிறுத்தி வாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காரின் சாரதி, அதிலிருந்த மற்றொரு நபர் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரே இவ்வாறு கடந்த 13ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 14ஆம் திகதி மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களுக்கு எதிராகத் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பல்வேறு கடுமையான பிரிவுகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *