கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு; சிகிச்சை பலனின்றி ராகமர நபர் உயிரிழப்பு!

1 Min Read

கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட ஒழுங்கையில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனங்களை பழுதுபார்க்கும் கராஜ் ஒன்றிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த இவர், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே நிலவி வரும் தனிப்பட்ட பகைமையின் காரணமாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் ‘ரிவோல்வர்’ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுவதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்யக் கல்கிஸ்ஸைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *