உயர்தர மாணவ,மாணவிகளுக்கான கடந்த வினாத்தாள் புத்தகங்கள்(PASS PAPER’S BOOK’S ) மக்கள் நல இளைஞர் மன்றத்தினால் வழங்கி வைப்பு!

Admin
By
Admin
1 Min Read

மட்/மே/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய உயர்தர மாணவ,மாணவிகளுக்கான கடந்த வினாத்தாள் புத்தகங்கள்(PASS PAPER’S BOOK’S) மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பொன்னம்பலம் கலாகரன் ஆசிரியர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் 09.09.2026 புதன் கிழமை இந்த கல்விசார் உதவித்திட்டம் மக்கள் நல இளைஞர் மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உதவித் திட்ட நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் நல இளைஞர் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் கோ.விஜயகுமார், அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயக்கொடி, மன்ற நிருவாகியும் சமூக சேவகருமான ந.ஆதன்குணா, மன்ற நிருவாகியும் சமூக சேவகருமான திரு.இலங்கேஸ்வரன், மன்ற நிருவாகியும் சமூக சேவகருமான தி.துவாரகன் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டுகளில் மக்கள் நல இளைஞர் மன்றத்தினால் நடாத்தப்பட்டது போன்று அடுத்து வரும் ஆண்டுகளில் அனைத்து பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் கல்விக் கருத்தரங்குகள் நடாத்தப்படும் என மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களினால் கூறப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *