இலங்கை இளையோர் அணி 424 ஓட்டங்கள்

1 Min Read

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதல் இன்னிங்ஸுக்காக 424 ஓட்டங்களை பெற்றுள்ளது.

காலியில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (14) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை இளையோர் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரட்டைச் சதம் பெற்றிருந்த சனுஜ வகுனுகொட 233 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது அவர் இளையோர் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற இலங்கை வீரராக சாதனை படைத்தார். 2011 இல் யஷோத லங்கா பெற்ற 213 ஓட்டங்களையே அவர் விஞ்சினார்.

தொடர்ந்து இலங்கை பின் வரிசை வீரர்கள் ஓட்டங்களை அதிகரிக்கத் தவறினர். இதனால் இலங்கை இளையோர் அணி 106.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 424 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆட்ட நேர முடிவில் 58 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 186 ஒட்டங்களை பெற்றுள்ளது. லக்ஷியா ரைசந்தனி 93 ஓட்டங்களுடனும் சகர் விர்க் 87 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *