சூரியவன்ஷிக்கு தனி அறை

1 Min Read

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருக்கும் 15 வயது வைபவ் சூரியவன்சிக்கு தனி உடைமாற்றும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின்போதும் அணியின் உரையாடல்களின்போதும் இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு சூரியவன்சி அனுமதிக்கப்பட்டாலும் உடைமாற்றும்போது தனி அறை பயன்படுத்தப்பட வேண்டி உள்ளது. மாற்றாக, அவர் முக்கிய உடைமாற்றும் அறையில் குறிப்பிட்ட நேரத்தில் தனியாக உடை மாற்றிக் கொண்டு, பின்னர் தனது மூத்த சக வீரர்கள் உடை மாற்றும் நேரத்தில் வெளியேறலாம்.

முன்னதாக இந்தியாவின் அயர்லாந்துக்கு எதிரான பெல்பாஸ்டில் நடைபெறும் போட்டிகளிலும் இந்த நடைமுறை கடைப்பிக்கப்படுவதாக தெரியவருகிறது. இதற்காக ஸ்டோர்மொன்டில் உள்ள சிவில் சேர்விஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கு மூன்று தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே சூர்யவன்சி தமது பெற்றோர்களுடனேயே இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதாகவும் அவர்களுக்கான செலவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்கும் என்றும் அந்த சபை குறிப்பிட்டிருந்தது.

இந்திய அணி இன்று ஆரம்பமாகும் அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 தொடர்களில் ஆடிய பின்னர் இஙகிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *