அட்டாளைச்சேனை மார்க்ஸ் மேன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, மர்ஹும் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி கிரிக்கெட் சுற்றுத் தொடரில் அக்கரைப்பற்று பதுர் பூம் போய்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
மார்க்ஸ் மேன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். கியாத் தலைமையில் கோணாவத்தை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியில் மார்க்ஸ் மேன் அணியை எதிர்கொண்ட பதுர் பூம் போய்ஸ் 43 ஓட்ட வெற்றி இலக்கை இலகுவாக எட்டி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இத்தொடரின் சிறந்த வீரராக மார்க்ஸ் மேன் அணியின் அஸ்ஜதும், இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக பதுர் பூம் போய்ஸ் அணியின் பிரோசும் தெரிவு செய்யப்பட்டனர்.




