பும்ராவுக்கும் ஒரு மோசமான நாள் இருக்க அனுமதிக்கப்படுகிறது: இறுதிப்போட்டி குறித்து நியூசிலாந்து வீரர்

1 Min Read

டி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பும்ராவுக்கும் மோசமான நாள் இருக்க அனுமதி உண்டு என, நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி கொடுக்கும் பும்ரா

நடப்பு டி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Jasprit Bumrah

இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வீரராக உள்ளார்.

இந்த நிலையில், பும்ரா குறித்து நியூஸிலாந்தின் ஆல்ரவுண்டர் வீரரான கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) கருத்து தெரிவித்துள்ளார்.

Jasprit Bumrah

தரமான பந்துவீச்சாளர்

அவர் கூறுகையில், “அவரும் மனிதர்தான். மற்றவர்களைப் போலவே அவருக்கும் ஒரு மோசமான நாள் இருக்க அனுமதிக்கப்படுகிறது. எனவே அவருக்கு எதிராக நமக்கு ஒரு நல்ல நாள் இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

மேலும், “இருதரப்பு தொடரிலும் நாங்கள் அவருக்கு எதிராக நல்ல பயணத்தை மேற்கொண்டோம் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர்” எனவும் கூறினார்.

Glenn Phillips

Jasprit Bumrah

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *