அபிஷேக் ஷர்மா ஹாட்ரிக் டக்அவுட்! சர்வதேச கிரிக்கெட் உங்களை அம்பலப்படுத்தும் – பாகிஸ்தான் வீரர்

1 Min Read

அபிஷேக் ஷர்மா நடப்பு உலகக்கிண்ணத்தில் ஆட்டமிழப்பதை பாகிஸ்தானின் மொஹம்மது ஆமிர் விமர்சித்துள்ளார்.

சொதப்பும் அபிஷேக் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக்அவுட் ஆகியுள்ளார்.

Abhishek Sharma

இது இந்திய அணியிக்கு சற்று பின்னடைவையாக உள்ளது. ரசிகர்கள் பலருக்கு அபிஷேக்கின் ஆட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மது ஆமிர் (Mohammad Amir) கூறிய கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது.

உங்களை அம்பலப்படுத்தும்

அவர், “அபிஷேக் ஒவ்வொரு பந்தையும் ஸ்லாட்டில் விரும்புகிறார்; அதனால் அவரால் அடிக்க முடியும். ஆனால், பெரிய தொடர்கள் அல்லது ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு பந்தையும் ஸ்லாக் செய்ய முடியாது.

சல்மான் ஆகா மற்றும் ஆர்யன் தத் ஆகியோர் அபிஷேக்கை இதேபோல் வெளியேற்றினர். சர்வதேச கிரிக்கெட் உங்களை அம்பலப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அபிஷேக் ஷர்மாவை தனது சக நாட்டு வீரரான சைம் அயூப்பை ஒப்பிட்டு குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Mohammad Amir

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *