ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வணிந்து ஹசரங்கா விலகியதைத் தொடர்ந்து, துஷான் ஹேமந்தா மாற்று வீரராக இலங்கை அணியில் களமிறங்கினார்.
Contents
ஹசரங்கா
2026 டி20 உலகக்கிண்ணத்தின் 16வது போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் பல்லேகேலேவில் விளையாடி வருகின்றன.

முன்னதாக இப்போட்டியில் இருந்து காயம் காரணமாக, இலங்கையின் ஆல்ரவுண்டர் வீரர் வணிந்து ஹசரங்கா விலகினார். இது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
ஹேமந்தா
இந்த நிலையில் அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா (Dushan Hemantha) சேர்க்கப்பட்டார்.

தற்போது ஓமன் அணிக்கு எதிராக இலங்கை அணி துடுப்பாட்டம் செய்து வரும் நிலையில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஹேமந்தா தனது பங்களிப்பை தர உள்ளார்.






