T20 World Cup 2026: 18வது ஓவரிலேயே 183 ரன் இலக்கை எட்டி..ஆப்கானை வீழ்த்திய நியூசிலாந்து

1 Min Read

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

நைப் அபாரம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

Gulbadin Naib

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

குல்பதின் நைப் (Gulbadin Naib) 35 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார். பெர்குசன் 2 விக்கெட்டுகளும், ஹென்றி, டுஃபி, ரச்சின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Sediqullah Atal/Tim Seifert

நியூசிலாந்து வெற்றி

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் (Glenn Philips) 25 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Afghanistan vs New Zealand, T20 World Cup

அதன் பின்னர் டிம் செய்பெர்ட் 42 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, மிட்செல் 25 (14) ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tim Seifert

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *