ஒரே பந்தில் 9 ஓட்டங்களை வழங்கிய இந்தியா – சிக்ஸர், நோ பால் கூட இல்லை

1 Min Read

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி ஒரு பந்தில் 9 ஓட்டங்களை வழங்கியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

U19 உலக கிண்ண தொடரின் நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.

ஒரே பந்தில் 9 ஓட்டங்களை வழங்கிய இந்தியா - சிக்ஸர், நோ பால் கூட இல்லை | India U19 Gives 9 Runs In One Ball Vs Afg No Six

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்கள் குவித்தது.

311 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரே பந்தில் 9 ஓட்டங்களை வழங்கிய இந்தியா - சிக்ஸர், நோ பால் கூட இல்லை | India U19 Gives 9 Runs In One Ball Vs Afg No Six

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

ஒரே பந்தில் 9 ஓட்டங்கள்

இந்த போட்டியில் இந்திய அணி ஒரே பந்தில் 9 ஓட்டங்களை வழங்கியுள்ளது. ஆனால், சிக்ஸரோ, அகலபந்தோ, நோ பாலோ இல்லை.

17 ஓவரை இந்திய வீரர் தேவேந்திரன் வீச, கடைசி பந்தை துடுப்பாட்டக்காரர் ஃபைசல் ஷினோஜாதா இடது பக்கம் அடிக்க முயன்று பந்தை தவற விட்டார்.

ஒரே பந்தில் 9 ஓட்டங்களை வழங்கிய இந்தியா - சிக்ஸர், நோ பால் கூட இல்லை | India U19 Gives 9 Runs In One Ball Vs Afg No Six

விக்கெட் கீப்பராக இருந்த அபிகியான் குண்டுவும் பந்தை தவறவிட, பந்து தரையில் வைக்கப்பட்டிருந்த ஃபீல்டிங் அணியின் ஹெல்மெட்டின் மீது பட்டு, பவுண்டரிக்கு சென்றது.

விதிப்படி, ஃபீல்டிங் அணி கழற்றி வைத்துள்ள ஹெல்மெட்டின் மீது பந்து பட்டால் 5 ஓட்டங்கள் வழங்கப்படுவதோடு, அந்த பந்தில் எடுத்த ஓட்டங்களும் கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறாக, ஒரே பந்தில் இந்திய அணி 9 ஓட்டங்களை வழங்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *