டெல்லி வாரியர்ஸ் அணிக்கு எதிரான வேர்ல்ட் லெஜெண்ட்ஸ் போட்டியில் ராஜஸ்தான் லயன்ஸ் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மோர்கன் ருத்ரதாண்டவம்
கோவாவில் ராஜஸ்தான் லயன்ஸ் மற்றும் டெல்லி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான வேர்ல்ட் லெஜெண்ட்ஸ் ப்ரோ டி20 லீக் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்கிஷன் டக்அவுட் ஆக, டுமினி 12 ஓட்டங்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அணித்தலைவ இயான் மோர்கன் (Eoin Morgan) ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் சிக்ஸர்களை பறக்கவிட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
அரைசதம் விளாசிய மோர்கன் 53 பந்துகளில் 10 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 87 ஓட்டங்கள் விளாசினார்.
ராஜஸ்தான் வெற்றி
கடைசி கட்டத்தில் அபிமன்யு மிதுன் 7 பந்துகளில் 33 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, ராஜஸ்தான் அணி 185 ஓட்டங்கள் குவித்தது. சுபோத் பாதி 5 விக்கெட்டுகளும், குர்கீரத் மற்றும் திவேஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய டெல்லி வாரியர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பவன் நேகி 38 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.
பர்விந்தர் அவனா 3 விக்கெட்டுகளும், அனுரீத், ஷதாப் மற்றும் ஏஞ்சலோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.





