பிக் பாஷ்: 42 பந்துகளில் 66 ஓட்டங்கள் தேவை..30 பந்துகளிலேயே ஆட்டத்தை முடித்த வீரர்

1 Min Read

பிக் பாஷ் லீக் போட்டியில் மேத்யூ வேட்டின் அதிரடியில் ஹோபார்ட் ஹரிக்கேன் அணி அபார வெற்றி பெற்றது.

எல்லிஸ் அபார பந்துவீச்சு

பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த பிக் பாஷ் போட்டியில், ஹோபார்ட் ஹரிக்கேன் மற்றும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது. ஓலிவர் பீகே 29 (22) ஓட்டங்களும், செய்பெர்ட் 26 (14) ஓட்டங்களும் எடுத்தனர்.

ஹோபார்ட் அணித்தலைவர் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேத்யூ வேட் அதிரடி

பின்னர் களமிறங்கிய ஹோபார்ட் அணி 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது. அப்போது களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருடன் கைகோர்த்த ரெஹான் அகமது 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

எனினும், மேத்யூ வேட் (Matthew Wade) அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட, ஹோபார்ட் அணி 19வது ஓவரிலேயே 163 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Matthew Wade

மேத்யூ வேட் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார். ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Matthew Wade

Matthew Wade

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *