மட்டக்களப்பு, நெல்லுச்சேனை | 28.10.2026
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லண்டனைச் சேர்ந்த திருமதி கார்த்திகா நிஷாந்தன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாவற்காடு – அக்னிச் சிறகுகள் பேரவையின் ஏற்பாட்டில், நெல்லுச்சேனை செந்தில் முருகன் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் தேவையுடைய 27 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருமதி கார்த்திகா நிஷாந்தன் அவர்களுக்கு நாவற்காடு – அக்னிச் சிறகுகள் பேரவை சார்பில் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், லண்டனைச் சேர்ந்த திரு. நாகராசா நிஷாந்தன் அவர்களது குடும்பத்தின் பெரும் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பாடசாலையில் கல்வி கற்கும் 27 மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் மற்றும் கொப்பிகள் வழங்கப்பட்டதுடன், பாடசாலையின் தேவையைக் கருத்திற்கொண்டு மின்விசிறி ஒன்றும் வழங்கப்பட்டது. மேலும், இரண்டு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கரவெட்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நெல்லுச்சேனை செந்தில் முருகன் பாலர் பாடசாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அக்னிச் சிறகுகள் பேரவையின் தாயகப் பொறுப்பாளரும் செயற்பாட்டாளருமான திரு. சோ. சிவாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர் திரு. வெ. சிவலோகநாதன், நெல்லுச்சேனை செந்தில் முருகன் ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், இளைஞர் கழக நிர்வாகிகள், மாதர் சங்க நிர்வாகிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
கல்வி கற்கும் சிறார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டம், சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியாக அமைந்தது.
இச்செயற்திட்டத்தைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்த அக்னிச் சிறகுகள் பேரவையின் தாயகப் பொறுப்பாளரும் செயற்பாட்டாளருமான திரு. சிவாகரன் அவர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர் திரு. வெ. சிவலோகநாதன் அவர்களுக்கும் பேரவையின் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
அத்துடன், இந்நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலப் பணியுடன் இணைத்து, சிறார்களின் கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கிய இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
திருமதி கார்த்திகா நிஷாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இச்சமூக நலப் பணிக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு. நாகராசா நிஷாந்தன் அவர்களது குடும்பத்தினருக்கும் நாவற்காடு – அக்னிச் சிறகுகள் பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.




