போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் ரூ.2.5 கோடி சொத்துகள் முடக்கம் – பாணந்துறையில் ஒருவர் கைது!

Admin
By
Admin
1 Min Read

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பாணந்துறை, எலுவில பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பாணந்துறை, மாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள 13 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான இருமாடி வீடு மற்றும் பாணந்துறை, மாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள தலா 13.1 பேர்ச்சஸ் கொண்ட, சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான 02 காணிகள் (தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதி) போன்ற சொத்துகள் நேற்று முதல் 14 நாட்களுக்கு இடைநிறுத்தி முடக்கப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று சனிக்கிழமை (24) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *