அவுஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டும் இளம் வங்காளதேச பந்துவீச்சாளர்

1 Min Read

டார்வினில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

வங்காளதேச அணி 426 ஓட்டங்கள்

அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நடந்து வருகிறது.

Australia vs Bangladesh Test, Darwin 2026

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேச அணி 426 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

தன்ஸித் ஹசன் தமிம் 101 ஓட்டங்களும், நஜ்முல் ஹொசைன் 84 ஓட்டங்களும், மெஹிதி ஹசன் 65 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோஷ் ஹேசல்வுட் 6 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 228 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

ஹசன் மஹ்முத் மிரட்டலான பந்துவீச்சு

26 வயது இளம் வீரரான ஹசன் மஹ்முத் (Hasan Mahmud) மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தினார்.

அவரது பந்துவீச்சில் ஜேக் வெதரால்ட் டக்அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஸ்சாக்னே 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் வெளியேறினார்.

நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மெஹிதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

கேமரூன் கிரீன் 43 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஹசன் 2 விக்கெட்டுகளும், டைஜுல் மற்றும் மெஹிதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Australia vs Bangladesh Test, Darwin 2026

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *