பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்டுகளுக்கான 400 மீற்றர் அரையிறுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்ற காலிங்க குமாரகே இறுதிப் போட்டிக்குப் தகுதி பெற தவறினார்.
ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் இலங்கை நேரப்படி நேற்று மாலை நடந்த அரையிறுதிச் சுற்றின் மூன்றாவது போட்டிப் பிரிவிலேயே குமாரகே பங்கேற்றார். எனினும் போட்டித் தூரத்தை 46.80 விநாடிகளில் நிறைவு செய்த அவர் 7 ஆவது இடத்தையே பிடித்தார். இதனால் அரையிறுதியில் பங்கேற்ற மொத்த வீரர்கள் வரிசையில் குமாரகே 20ஆவது இடத்தையே பிடித்தார்.
இதில் நைஜீரியாவின் சாமுவேல் ஒகாஸி அரையிறுதிச் சுற்றில் சிறந்த காலத்தை வெளிப்படுத்தி இருந்தார். போட்டித் தூரத்தை 44.52 விநாடிகளில் நிறைவு செய்த அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
காலிங்க குமாரகே ஆண்களுக்கான 400 மீற்றர் ஆரம்பச் சுற்றில் போட்டித் தூரத்தை 46.28 விநாடிகளில் நிறைவு செய்தே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டி நாளை (01) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலிங்க குமாரகே உட்பட இலங்கை அணி பங்கேற்கும் ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் ஆரம்பச் சுற்றுப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.




